2025 மே 21, புதன்கிழமை

வடகாடு கிராமத்தில் இருந்து வெளியேறும் குடும்பங்கள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கின் வடகாடு கிராமத்தில் இருந்து குடும்பங்கள் வெளியேறத் தொடங்கி விட்டன.

கடந்த 04ஆம் திகதி நடைபெற்ற மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாந்தை கிழக்கின் ஒட்டறுத்தகுளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள வடகாடு கிராமத்தில், கசிப்பு உற்பத்தி உட்பட அதிகரித்துள்ள சமூக வன்முறைகளால் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மாங்குளம் பொலிஸார் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பொலிஸாரின் நடவடிக்கை எடுக்கப்படாமையால் வடகாடு கிராமத்தில் இருந்து குடும்பங்கள் வெளியேறப் போவதாகத் தெரிவித்த நிலையில், தற்போது இரு குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி கிராமத்தில் இருந்து வெளியேறி உள்ளனர்.

வடகாடு கிராமத்தில் காணப்படுகின்ற சட்டவிரோதச் செயற்பாடுகளை மாங்குளம் பொலிஸார் கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவாகவே, தற்போது குடும்பங்கள் வெளியேறி வருகின்றன.

இந்நிலையில், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் வடகாடு கிராமத்தில் இருந்து குடும்பங்கள் வெளியேறாமல் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X