Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, வடகாடு கிராமத்தில் இருந்து இதுவரை நான்கு குடும்பங்கள் வெளியேறி உள்ளன.
கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியால் ஏற்பட்டுள்ள சமூக வன்முறை காரணமாகவே நான்கு குடும்பங்கள் கிராமத்தில் வெளியேறி உள்ளன.
கடந்த மாதம் 04ஆம் திகதி, மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், வடகாடு கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியால் சமூக வன்முறை அதிகரித்துள்ளதாகவும் குடும்பங்கள் கிராமத்தில் இருந்து வெளியேற உள்ளதாகவும் கிராமத்தைக் பாதுகாப்பதற்கு மாங்குளம் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கூட்டம் நடைபெற்று நாற்பத்தைந்து நாள்கள் கடந்த நிலையிலும், மாங்குளம் பொலிஸார் வடகாடு கிராமத்துக்குச் செல்லவுமில்லை. மக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டங்களையும் நடத்தவுமில்லை.
இந்நிலையில் சமூகவன்முறையால் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்கள் கிராமத்தில் இருந்து வெளியேறி உள்ளன. மாந்தை கிழக்கில் அதிகரித்துக் காணப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அடிக்கடி பிரதேச செயலாளரிடம் பொது மக்களினால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸார் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். காரணம் பொலிஸாருக்கு வழங்கப்படுகின்ற தகவல்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு சென்றடைவதன் காரணமாக சமூக வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸாரின் ஆதரவு இருப்பதாக மாந்தை கிழக்கு பொது அமைப்புகளால் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்கள் மாந்தை கிழக்கில் காணப்படும் நிலையில் மாங்குளம் பொலிஸார் கிராமங்களில் நடைபெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் மந்த கதியில் இயங்குவதாக, பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .