2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘வன்னி மாவட்டம் பாரிய எழுச்சி மாற்றத்தைக் கண்டுள்ளது’

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

வன்னி மாவட்டம் முழுவதும் ஒரு பாரிய எழுச்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், பல கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றவர்களும் தங்கள் எழுச்சியைக் கண்டு மிரண்டுபோயுள்ளனரெனவும் கூறினார். 

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் புகுதியில், நேற்று (04) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் மாற்று இனத்தவர்களுக்கு வாக்களிக்கக்கூடாதெனவும் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் அனைவரும் இணைந்து, வன்னியில், சிங்கள இனத்தவர் ஒருவரைக் கொண்டுவருவதற்கு முயற்சி செய்வதாகவும் கூறினார். 

முல்லைத்தீவு மாவட்டம் போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமெனத் தெரிவித்த அவர், இந்த மாவட்டத்துக்குதான் நாடாளுமன்ற உறுப்பினரரும் அமைச்சர் ஒருவரும் தேவையாக இருப்பதாகவும் கூறினார். 

மன்னார் மாட்டம், மாற்று இனத்தவர்களிடம் சென்று விட்டதாகத் தெரிவித்த பிரபா கணேசன், வவுனியாவின் நகரப்பகுதி அனைத்தையும் மாற்று இனத்தவர்கள் கைப்பற்றியுள்ளனரெனவும் கூறினார்.  

வன்னி மாவட்டம் மாற்று இனத்தவர்களின் கைகளில் போகாமல் தடுப்பதற்குத் தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டுமெனவும், அவர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .