2025 மே 15, வியாழக்கிழமை

’வன்னேரிக்குள பஸ் மாலையிலும் பயணிக்க வேண்டும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வன்னேரிக்குளத்தில் இருந்து காலையில் புறப்படுகின்ற இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸினை அதே வழித்தடத்தில் மாலையில் யூனியங்குளம், கோணாவில் வழியாக பயணிக்குமாறு, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வன்னேரிக்குளத்தில் இருந்து காலையில் புறப்படும் குறித்த பஸ் ஆனைவிழுந்தான், அக்கராயன், ஸ்கந்தபுரம், அணைக்கட்டு வீதி வழியாக அக்கராயன் கிழக்கு, யூனியங்குளம், கோணாவில் வழியாக கிளிநொச்சி நகரத்தினை சென்றடையும்.

ஆனால் மாலையில் குறித்த வழித்தடத்தில் பஸ் பயணிக்காமல், ஸ்கந்தபுரம் வழியாக வன்னேரிக்குளத்தை குறித்த பஸ் சென்றடைவதாகவும் மாலையிலும் கோணாவில், யூனியங்குளம் வழியாக வன்னேரிக்குளத்தைச் சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி யூனியங்குளம் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மாலை வேளையில் பஸ் பயணிக்காததன் காரணமாக மூன்று கிலோ மீற்றருக்கு அதிகமான தூரம் யூனியங்குளம் மக்கள் நடந்து செல்ல வேண்டி உள்ளதாகவும் அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்குக் கூட மக்கள் செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாகவும் இந்நிலையில், குறித்த பஸ்ஸினை மாலையிலும் யூனியங்குளம் வழியாக பயணிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு, பொது மக்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .