2025 மே 15, வியாழக்கிழமை

வயல் சீரமைப்பில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப் பிரிவுக்குட்பட்ட சூரியன் ஆற்றுக்கு அருகிலுள்ள வயல்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மூவர், நேற்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து, சீரமைப்புப் பணிக்காகப் பயன்படுத்திய உபகரணங்களும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், இனிவரும் காலங்களில், சூரியன் ஆற்றுக்கு அப்பாலுள்ள பகுதிகளில், மக்கள் விவசாயத்தில் ஈடுபடக்கூடாதென்று, வனவளத் திணைக்களத்தினரும் இராணுவத்தினரும் மிரட்டியதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வருட பெரும்போக நெற்பயிர்ச் செய்கைக்காக வயல் நிலங்களைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போ​தே, அப்பகுதிக்கு வந்த வனவளத் திணைக்களத்தினரும் இராணுவத்தினரும், இந்தப் பகுதிகளில் இனிமேல் பயிர்ச்செய்கை செய்யமுடியாதெனக் கூறியதுடன், அங்கு சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளைக் கைதுசெய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .