2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

வரட்சி நிலை தொடர்பான விவரங்கள் கொழும்புக்கு

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் வரட்சி தொடர்பான விவரங்கள், கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளனவென, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தனர்.

 

​கிளிநொச்சி மாவட்ட வரட்சி தொடர்பாக, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், ஊடகங்களுக்கு இன்று (01) கருத்துத் தெரிவிக்கும்போதே கூறியதாவது,

 “வரட்சியால், 85,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களில் 25,000 குடும்பங்களுக்கு, உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது. குடிநீர் நெருக்கடி காணப்படுகின்ற கிராமங்களில் பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் ஆகியன, குடிநீர் வழங்கலில் ஈடுபட்டுள்ளன.

“வரட்சி தொடர்பாக விவரங்கள், கொழும்புக்கு அனுப்பப்பட்டு, உதவிகளுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.

வரட்சி தொடர்பாக, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் இன்று (01) கருத்துத் தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால், 30,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

“முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும், வரட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வரட்சியால் பாதிக்கப்பட்ட 10,000 குடும்பங்களுக்கு, உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கான விவரங்கள், கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

“கொழும்பில் இருந்து கிடைக்கின்ற உதவிகளைக் கொண்டு, வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு, முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தயாராக இருக்கிறது.

"குடிநீர் நெருக்கடி காணப்படுகின்ற கிராமங்களில், பிரதேச செயலகங்களின் ஒழுங்குபடுத்தலில் குடிநீர் விநியோகம் இடம்பெற்று வருகிறது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .