Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள முகமாலை என்னும் கிராமம் வரட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக பருவ மழை பொய்த்து போனதன் காரணமாக, குறித்த பிரதேசத்தில் கிணறுகளில் நீர் வற்றியுள்ளதையும் வாழ்வாதார பயிர்கள் அளிவடந்துள்ளமையையும் மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கால்நடைகளிற்கும் நீர் இன்மையால் கால்நடைகள் இறப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறித்தப் பகுதிக்கு விஜயம் செய்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் குருகுலராசா மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் உறுப்பினர் வீரவகுதேவரிடம் மக்கள் இப்பிரச்சனை தொடர்பில் தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .