2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வரதராஜப்பெருமாளுக்கு எதிராக போராட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் வடக்கு - கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டன போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

வவுனியாவில் கடந்த 930ஆவது நாள்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளே ,இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, வரதராஜப்பெருமாளின் முகம் பதிக்கப்பட்டு சித்திரிக்கப்பட்ட புகைப்படத்துக்கு விளக்குமாற்றால் அடித்து சாணத்தை கரைத்து ஊற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வெளியேறு வெளியேறு வரதரே ஒரிசாவுக்கு சென்றுவிடு என்றும் கோசங்களை எழுப்பி  போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க  ஜரோப்பிய ஒன்றியங்களின் கொடிகளுடன் தமிழர் இரத்தம் குடித்த ஒட்டுக்குழு வரதர் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதை ஒன்றினையும் தாங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .