2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘வருகை குறைவால் தீர்மானம் எடுப்பதில் சிக்கல்’

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கூட்டங்களுக்கு விவசாயிகளின் வருகை குறைவாகக் காணப்படுவதன் காரணமாக தீர்மானங்களை எடுப்பதில் நெருக்கடி நிலைமை காணப்படுவதாக, அக்கராயன் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பார்த்தீபன் தெரிவித்தார்.

கிளிநொச்சி - வன்னேரிக்குளத்தில் கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு, வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து்த தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தரைத்த அவர், அக்கராயன் கமநல சேவை நிலையத்தின் கீழ் 12 கமக்கார அமைப்புகள் இயங்குவதாகவும் இவற்றில் வன்னேரிக்குளம் கமக்கார அமைப்பு சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் கூட்டங்களுக்கு விவசாயிகளின் வருகை குறைவாகக் காணப்படுவதன் காரணமாக தீர்மானங்களை எடுப்பதில் நெருக்கடி நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்த அவர், எதிர்வரும் காலங்களில், விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X