2025 மே 16, வெள்ளிக்கிழமை

வருடாந்தப் பொங்கல் உற்சவம்

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவிலின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்றைய தினம் (08) அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற நடைபெற்றது.

இந்நிலையில், கோவிலைச் சூழ இராணுவத்தினர் குவிக்கப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன், வீதித் தடைகள் போட்டு, கோவிலுக்கு வருபவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

இருப்பினும், கோவிலுக்கு வருகைதந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .