2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வலய மட்ட சிறுவர் தின நிகழ்வுகள்

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -மு.தமிழ்ச்செல்வன்   

கிளிநொச்சி வலய மட்ட சிறுவர் தின நிகழ்வுகள், கோணாவில் பாடசாலையில் நடைபெற்றது.

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில்  கனடா ஈகை நிறுவனத்தின் அணுசரனையில், இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ். பல்கலைக்கழ மாணவர்கள் விசேடமாக வருகைதந்து, கோணாவில் பாடசாலை  மாணவர்களுடன்' விளையாட்டு உள்ளிட்ட  நிகழ்வுகளில் ஈடுப்பட்டனர்.

மாணவச் சிறார்களை மகிழ்விக்கும் வகையில்,  பல்கலைக்கழக மாணவர்கள் ஆடியும் பாடியும் மாணவர்களுடன் நிகழ்வுகளில் ஈடுப்பட்டனனர். காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிகழ்வுகள் இடம்பெற்றன.

பாடசாலையின் அதிபர் இதயசிவதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜன், கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் செயலாளர் ஸ்ரீகௌரிபாலா எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X