Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2019 ஜனவரி 30 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி பேரணியை நடத்தினர்.
மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய 8 மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியில் காலை 10 மணியளவில் ஒன்றிணைந்து, சர்வதேசத்தின் தலையீட்டினைக்கோரி கதறி அழுது போராட்டத்தை மேற்கொண்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பஸ் நிலையத்திலிருந்து பேரணியாக பஜார் வீதி வழியாக ஹொறவப்பொத்தான வீதியூடாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை வந்தடைந்து கண்டி வீதி வழியாக மணிக்கூட்டுக்கோபுரத்துக்கு வந்து பழைய பேருந்து நிலையத்தினை திரும்பவும் வந்தடைந்ததுடன் போராட்டத்தினை நிறைவு செய்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மகஜரினை மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஊடக பேச்சாளர் கே.தேவராசா தெரிவித்தார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025