Editorial / 2018 மார்ச் 18 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீப்
வாகனம் ஒன்றுக்கு லீசிங் பணம் கட்டுவதற்காக வழிப்பறி நகை அறுப்பில் ஈடுபட்ட பூசாரியும் தொழில்நுட்ப கல்லூரி மாணவன் ஒருவரும் நேற்று (17) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் அளவெட்டி மற்றும் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 14ஆம் திகதி, மானிப்பாய் - இணுவில் வீதியில் வைத்து வீதியில் சென்ற பெண் ஒருவர் அணிந்திருந்த இமிட்டேசன் நகையை அறுத்த குற்றச்சாட்டில் முதலாவது சந்தேநபரான பூசாரி மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், பூசாரியுடன் இணைந்து செயற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரி மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை மற்றும் கொக்குவில் பகுதிகளில் இடம்பெற்ற வழிப்பறி சம்பவங்களுடனும் இவர்களுக்கு தொடர்புள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 2 சங்கிலிகளும் 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago