2025 மே 21, புதன்கிழமை

வவுனியா குளங்களைப் பார்வையிட்ட ஆளுநர்

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

“குளங்கள் கிராமங்களின் வளர்ச்சி” எனும் தொனிப்பொருளில், காலநிலை மாற்றத்தைத் தாக்குப்பிடிக்கும் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவக் கருத்திட்டத்தின் கீழ், வவுனியாவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் குளங்களை, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (05) பார்வையிட்டார்.

கடந்த வருடம் குறித்த திட்டத்தின் கீழ், 14 குளங்கள் வவுனியாவில் புனரமைப்பு செய்யப்படுவதற்குத் தெரிவு செய்யப்பட்டு, அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளபட்டுள்ள நிலையில், அதன் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இன்றுக் காலை 10 மணிக்கு, வவுனியா மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர், அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட ஆளுநர், அதன் பின்னர் மதகுவைத்த குளத்துக்குச் சென்று புனரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டிருந்ததுடன், ஏனைய சில குளங்களையும் சென்று பார்வையிட்டிருந்தார்.

காலநிலை வேறுபாடுகள், தீவிர மாற்றங்களுக்குத் தாக்குபிடித்தலை நோக்காகக் கொண்டு உலர் வலயங்களில் வாழும் சிறு விவசாயிகளைப் பலப்படுத்தும் நோக்குடன் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்சித் திட்டத்தின் நிதி உதவியுடன் குறித்த அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .