2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘வவுனியா புதிய பஸ் நிலைய பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை’

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

எதிர்வரும் வாரத்தில், வவுனியா மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரைச் சந்தித்து கலந்துரையாடி, வவுனியா புதிய பஸ் நிலையத்திலுள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் எதிர்நோக்கும் சோதனை நடவடிக்கைகள், போக்குவரத்து தொடர்பான நடைமுறைச்சிக்கல்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியாப் பிராந்திய அலுவலகத்தில், இன்று (29) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதன்போது, பஸ் நிலையப் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் குறித்து, அவர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில், வன்னி மாவட்டப் பிரதம போக்குவரத்துப் பணிப்பாளர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .