2025 மே 17, சனிக்கிழமை

வவுனியா வைத்தியசாலையில் சிறுமி திடீர் மரணம்

க. அகரன்   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த குறித்த சிறுமி, சுகயீனம் காரணமாக நேற்று (19)  மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் தேக்கவத்தையைச் சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை குறித்த சிறுமிக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இரத்த மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனைக்காக, அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைபிரிவு தொற்றுநீக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .