2025 மே 22, வியாழக்கிழமை

வவுனியாவில் 434 ஏக்கர் அழிவடைய வாய்ப்பு

Editorial   / 2019 ஜூலை 06 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், வரட்சி காரணமாக 434 ஏக்கர் நெற்செய்கை அழிவடைய வாய்ப்புள்ளதாக, மாவட்ட அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஆர்.  விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு, அவர் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தில் 6166.6 ஏக்கர் விவசாய நிலத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள கமக்கார அமைப்புக்களால் உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

எனினும் குளங்களில் தண்ணீர் மட்டம் குறைவடைந்து காணப்பட்டுள்ளதால் 6303 ஏக்கரில் விதை நிலத்தில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 273 விவசாயிகள் இதனை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியுடனான வானிலை காரணமாக 120.75 ஏக்கர் சேதமடைந்துள்ளது. மேலும், வரட்சியுடனான வானிலை நீடித்துச் செல்வதால், மேலும் 434 ஏக்கர் நெற் செய்கை அழிவடைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X