Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இன அழிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் ஒன்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்றையதினம் காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம், தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து யாழ்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஊர்தியில் அமைக்கபட்டிருந்த திலீபனின் திருவுருவ படத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கபட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ,கயேந்திரன், சட்டதரணி சுகாஸ், உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, நடைபயணம் வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியை தாண்டி பஜார் வீதியை நெருங்கிய வேளை ஊர்வலத்தை தடுத்த பொலிஸார் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட நிலையில், சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் பயணத்தை மேற்கொள்ளுமாறு, பொலிஸாரால் பணிக்கபட்டது. அதன்பின்னர், புதிய பஸ் நிலையம் வரைக்கும் ஒலிபெருக்கி பாவனை இல்லாமல் நடைபயணம் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
29 minute ago
32 minute ago