Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் அண்மைய காலமாக டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதனால் 24 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து, வியாபார, வர்த்தக நிலையங்களில் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியா, மில் வீதி, பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி போன்ற வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில், நேற்று பரிசோதனை நடவடிக்கை பொது சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள், குறித்த வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்பட்டு, தற்போது அப்பகுதிகள் சீரமைப்பதற்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் திருத்தி அமைக்க தவறியவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, பொது சுகாதாரப் பரிசோதகர்களால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .