Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், மருத்துவ உபகரணத்தைக் கண்டுபிடித்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தேசிய மட்டப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வவுனியா சைவ பிரகாச மகளிர் கல்லூரியில் 12ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி இரத்தப் பரிசொதனைக்காக இரத்தத்தை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
மாகாண மட்ட.த்தில் இடம்பெற்ற ரேபோட்டிக் போட்டியில் பங்கேற்பதற்காக பாடசாலை அதிபர் திருமதி பி. கமலேஸ்வரியின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப்பொருட்களின் ஊடாக ரேபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்தார்.
கழிவுப்பொருட்கள் என பயன்படுத்தாது எறியப்பட்ட பொருள்களையும் தனது கண்டுபிடிப்புக்கு மாணவி பயன்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த மாணவி இரத்தபரிசோனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDELINJECTOR) கண்டுபிடித்தார்.
இக்கண்டுபிடிப்பை, மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ரேபோட்டிக் போட்டியில் பங்கேற்க வைத்ததன் ஊடாக மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட இம்மாணவி தேசிய மட்டத்தில் இடம்பெறும் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.
38 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
2 hours ago