2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியாவில், முன்னாள் போராளி ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்குதலுக்கு இலக்காகி, படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், நேற்று  (10) இரவு இடம்​பெற்றுள்ளது.

முன்னாள் போராளியும் சமூக சேவகரும் தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவருமான வி.விநோதரன் (ஈழம்) என்பவரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானவராவார்.

வவுனியா - கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தமிழர் நிலம் மக்கள் அமைப்பின் அலுவலகத்துக்குள் நேற்று  (10) இரவு உட்புகுந்த இனந்தெரியாத நபர்கள், அந்த முன்னாள் போராளி மீது சராமரியாக தாக்குதல் நடத்தியதுடன், அலுவலகத்தில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .