2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா வடக்கு - நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுமடு, அலகல்லுக் குளக்கரையில் இருந்து, இன்று (03), காயங்களுடன் காட்டு யானையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துவக்கு வெடித்ததாலேயே, குறித்த யானை இறந்துள்ளதாகவும், இந்த யானை, ஐந்து நாள்களுக்கு முன்னரே இறந்திருக்கலாமெனவும், பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் வன பாதுகாப்புத் துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .