2025 மே 16, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் விசேட ரோந்து நடவடிக்கை

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியாவில் வழமைக்கு மாறாக இராணுவத்தினர் இன்று (12), வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

குற்றச்செயல்கள், சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் நகரில் அளவுக்கதிகமான மக்கள் நடமாட்டம் காரணமாகவுமே, இராணுவத்தினர் வீதி ரோந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக நகரின் முக்கிய பகுதிகள், பூங்காவீதி, குருமன்காடு போன்ற உள்ளக வீதிகளில், மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், இன்று (12) காலை, ஹெலிகொப்டரொன்றும் வவுனியாவை வட்டமிட்டு சென்றது.

புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், பாரிய குற்ற செயல்களைத் தடுப்பதற்கு, ஹெலிகொப்டர் மூலமும் விசேட நடவடிக்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .