2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியாவில் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

நேற்றுக் காலை,  செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், பூவரசன்குளம் பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளானது.

இதன்போது, பஸ்ஸில் பயணித்த பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை, செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியாவுக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், பூவரசன்குளம் - சண்முகபுரம் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது, திடீரென்று இயந்திரக்கோளாறு ஏற்பட்டு வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் மேய்ந்துகொண்டிருந்த இரண்டு மாடுகள் மீது மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது, மாடுகள் உயிரிழந்துள்ளன. இருப்பினும், பஸ்ஸில் பயணித்த பயணிகள் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. 

இவ்விபத்து தொடர்பில்,  பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .