Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 30 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - செங்கல்படை பகுதியில், கள் விற்பனை நிலையம் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களாலும் மாணவர்களாலும், இன்று (30) காலை வீதிமறியல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிராம மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குறித்த கள் விற்பனை நிலையம் நிர்மாணிக்கப்பட்டு, இன்று (30) முதல் இயங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையிலேயே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இதற்குரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .