Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 12 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
விவசாய நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ, வவுனியாவுக்கு இன்று (12) விஜயம் மேற்கொண்டார்.
வவுனியா - போகஸ்வெவ பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அவர், அப்பகுதியில் உள்ள மகாகம்பிலிவெவ குளத்தின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்தக் குளமானது, 32 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளதுடன், அதன் மூலம் 400 ஏக்கர் வரையிலான விவசாயச் செய்கையை முன்னெடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இக்குளத்தைப் புனரமைப்பதன் மூலம், இரு போகங்களுக்கு மாத்திரம் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு அப்பால் 12 மாதங்களும் இந்த மக்கள் தமக்கான உணவுத்தேவையை பூரணப்படுத்தக்கூடியதாக இருக்குமென்றார்.
“மகாவலி “எல்” வலயத்தில் இந்தப் பகுதி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் மகாவலி நீர் எப்போது வரும் என்று கோரிக்கை முன்வைக்கின்றனர். அதனையும் கருத்திற்கொண்டே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” எனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago