2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

’வான் வழியாக வெளியேறும் வெள்ளத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது’

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

முல்லைத்தீவு - வவுனிக்குளத்தின் வான் வழியாக வெளியேறும் வெள்ளத்தால், பொதுமக்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென, வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் கை.பிரகாஸ் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற மாந்தை கிழக்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வவுனிக்குளத்தின் வான்பகுதி வழியாக வெளியேறும் வெள்ளம், குடிமனைகளுக்குள் புகுந்துக்கொள்ளக் கூடிய நிலையிலேயே, வான்பகுதியில் பற்றைகள் வளர்ந்துக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், நீர்ப்பாசனத் திணைக்களத்தால், வவுனிக்குளம் நாள்தோறும் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், வான் வெள்ளம் வெளியேறினாலும், குடிமனைகளுக்குள் வெள்ளம் புகுந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இல்லையெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .