Freelancer / 2022 நவம்பர் 08 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - புதுமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் இன்று காலை வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியால் சென்றவர்கள் சடலம் வாய்க்காலில் கிடப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப. சத்தியராஜ் (வயது 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


13 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
52 minute ago