Niroshini / 2021 ஜூலை 14 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர்புரம் கிராமத்தில், வீடொன்றுக்குள் புகுந்த குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வள்ளுவர்புரம் கிராமத்தில் உள்ள 2 இளைஞர் குழுக்களுக்கு இடையில் கஞ்சா பாவனை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த இளைஞர் குழுவொன்று, அங்கிருந்த சைக்கிள், பொருள்களை வாளால் வெட்டி சேதப்படுத்தியுள்ளதுடன், 24 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த பெண் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதி சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, வாள்வெட்டுடன் சம்பந்தப்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலும் பலரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago