2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வாள்வெட்டு; குடும்பஸ்தர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2022 ஜூலை 27 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முள்ளியவளை தெற்குப் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளது.

இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கான முள்ளியவளை தெற்கைச் சேர்ந்த குடும்பஸ்தரான  32 வயதுடைய பெருமாள் சதீஸ்வரன் என்பவர் படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு நடைபெற்ற போதும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு கிராமத்தவர்கள் தெரியப்படுத்தியும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைதரவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

கும்பஸ்தரின் சடலம்,  மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X