Freelancer / 2022 ஜூலை 18 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் வாழை பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் கடும் காற்று காரணமாக வாழ்வாதாரமாக வைக்கப்பட்டுள்ள வாழைகள் அழிவடைந்து வருவதாகவும், இது தொடர்பாக விவசாயிகள் திணைக்களம் மற்றும் கமநல சேவைத் திணைக்களம் என்பன மதிப்பீடு செய்வது மாத்திரமே நிகழ்கின்றன.
அதற்கான நட்டஈடு ஒருபோதும் கிடைக்கப் பெறுவதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எரிபொருளினை அதிக விலைக்கு கொள்வனவு செய்து நீரைப்பாய்ச்ச வேண்டியுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு உரிய நட்டஈட்டினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago