2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விசேட அதிரடிப் படை விசேட அறிவிப்பு

Editorial   / 2022 ஒக்டோபர் 27 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 க. அகரன் 

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த  விஷேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.  வவுனியாவுக்கு உரிய விஷேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

தற்காலத்தில் வடக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை ,  குற்றச்செயல்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே விஷேட அதிரப்படையினர் களமிறங்கியுள்ளனர். 

வவுனியாவில் அதிகரித்துவரும் போதைப்பொருள் வியாபாரம், போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான  நடவடிக்கையை அதிரடியாக கட்டுப்படுத்தவே விஷேட அதிரடிப்படையினர் களமிறங்கியதோடு தகவல்களை வழங்க பின்வரும் விஷேட தொலைபேசி இலக்கங்களும் 0718592378, 0112580518 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .