2025 மே 21, புதன்கிழமை

‘விடுதிகளை நிர்மாணிப்பதன் மூலம் ஆசிரியர்களை நியமிக்க முடியும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

ஆசிரிய விடுதிகளை நிர்மாணிப்பதன் மூலம், ஆசிரியர்கள் தங்கி நின்று கற்பிக்கக் கூடிய சூழல் உருவாகுமென, துணுக்காய் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சஞ்சீவன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - ஒதியமலை பாடசாலைக்கு, பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களை நியமிக்காமல், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை நியமிக்குமாறு, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, போக்குவரத்து வசதி உள்ள இடங்களுக்கு, பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களைப் பணிக்கு இணைத்து விட்டு, உள்ளூரில் வாழ்கின்ற ஒதியமலைக் கிராமத்துக்கு வந்து செல்லக் கூடிய ஆசிரியர்களை நியமிப்பதற்கு, துணுக்காய் வலயக் கல்விப் பணிமனை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக, துணுக்காய் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சஞ்சீவனிடம் தொடர்பு கொண்டு வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த துணுக்காய்க் கல்வி வலயத்தில், 60 பாடசாலைகள் இயங்குவதாகவும் அவற்றில் 15 பாடசாலைகளில் ஆசிரிய விடுதிகள் இல்லையெனவும் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்தப் பாடசாலைகளுக்கு ஆசிரிய விடுதிகளை நிர்மாணிப்பதன் மூலம், ஆசிரியர்கள் தங்கி நின்று கற்பிக்கக் கூடிய சூழல் உருவாகுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .