2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

விபச்சார விடுதி முற்றுகை; துப்பாக்கியும் மீட்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் விபச்சார விடுதி ஒன்றை ​நேற்று (19) பொலிஸார் சுற்றிவளைத்ததுடன், இரு பெண்கள் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் குறித்த விடுதியில் இருந்து ரி56 ரக 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மோப்ப நாயின் உதவியுடன் வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இதன்போது குறித்த விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள், விடுதி முகாமையாளர் (ஓய்வுபெற்ற இராணுவ வீரர்) மேலும் ஒரு ஆண் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் குறித்த விடுதியில் பொலிஸார் சோதனை செய்தால் அங்கிருந்து பெண்கள் தப்பியோடும் வகையில் சுவர் ஒன்றில் சுட்சுமான முறையில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தமை பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் குறித்த விடுதியில் பொலிசார் சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இயங்கு நிலையில் உள்ள ரி56 ரகத்தினை சேர்ந்த 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த விடுதி ஓய்வுபெற்ற இராணுவ வீரருடையது என்பதுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.(R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X