2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விரும்பியபடி விளாசினார் ஆசிரியர்: மாணவனுக்கு விருப்பமில்​லை

Editorial   / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்
 
கிளிநொச்சியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர் மிக மோசமாக தாக்கியதில்  மாணவன் கையில் காயம் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளன என  பெற்றோர் கவலை தெரிவித்து்ளளனர்.

தனது துவிச் சக்கர வண்டியை தொலைத்த நிலையில், கடந்த  வாரம்  மூன்று நாட்களாக மாணவன் பாடசாலைக்குச் செல்லவில்லை,  எனினும், இவ்வாரம் பாடசாலைக்குச் சென்றுள்ளார். எனினும், கடந்த வாரம் வழங்கப்பட்ட வீட்டுப் பாடங்களை மாணவன் செய்திருக்கவில்லை.

வீட்டுப் பாடங்களை மாணவன் செய்யவில்லை எனத் தெரிவித்தே பெரியளவிலான தடி ஒன்றினால், ஆசிரியர் அந்த மாணவனை தாக்கியுள்ளார்.

 இதனால் கையில் காயமும் வீக்கமும் ஏற்பட்டுள்ளது. உடம்பில் உட்காயங்கள் காரணமாக மகன் பாதிக்கப்பட்டுள்ளார் என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் உப அதிபரின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு தனது மகன் அந்தப் பாடசாலைக்கு செல்வதனை விரும்பவில்லை. எனவே   வேறு பாடசாலை ஒன்றில் மகனை இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.

 மேற்படி விவகாரம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது.  அவ்வாறானதொரு  சம்பவம் இடம்பெற்றதை நிர்வாகம்  உறுதிப்படுத்தியது. அத்துடன்,   இது
தொடர்பில்  கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .