2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விறகுவெட்டச் சென்றவர் மீது படையினர் தாக்குதல்

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, மருதங்குளம் பகுதியில, விறகு வெட்டுவதற்காகக் காட்டுக்குச் சென்ற குடும்பஸ்த்தர் ஒருவர், படையினரால் தாக்கப்பட்ட நிலையில், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டுவதற்குச் சென்ற நபர், படையினர் நிற்பதைக் கண்டு, அங்கிருந்து வீடு நோக்கி செல்ல முயன்றபோதே, படையினரால் துரத்திப்பிடிக்கப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.  

இதன்பின்னர், கணவனைக் காணவில்லை என்று, மனைவியால் கிராம அமைப்பின் தலைருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, பொலிஸ் நிலையத்திலிருந்து குறித்த நபர் அழைத்து வரப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .