2025 மே 16, வெள்ளிக்கிழமை

விளையாட்டு மைதானத்துக்கான காணி அடையாளப்படுத்தப்பட்டது

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில், தேசிய விளையாட்டு மைதானத்துக்கான காணி, கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு, அரசாங்கத்தால், முல்லைத்தீவு மாவட்டத்தில், தேசிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கான இடமும் மாவட்டச் செயலாளரின் ஏற்பாட்டின் கீழ் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ஒதுக்கப்பட்டது.

இதுதொடர்பில், எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதனின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து, ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட காணியில் பொதுமக்களின் காணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காணப்படுவது தெரியவந்துள்ளதை தொடர்ந்து, கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் 22 ஏக்கர் காணி அரச காணி அடையாளப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .