Freelancer / 2022 ஜூலை 04 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
விவசாயிகளுக்கான எரிபொருளினைப் பெற்றுக் கொடுப்பதில் முதன்மையளித்து வருவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தெரிவித்தார்.
மேலும், மாவட்டத்தில் தற்போது சிறுபோக நெல் அறுவடை நடைபெற்று வருகின்றது. எரிபொருள் வரவுகள் குறைவடைந்துள்ளது. போக்குவரத்து துறையினர் எரிபொருள் நெருக்கடியினால் சேவையில் ஈடுபடாமல் உள்ளனர்.
எரிபொருள் நெருக்கடி தொடர்பாக துறைசார் அமைச்சுகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கையின் அறுவடை தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் எரிபொருள் நெருக்கடியினால் அறுவடை மேற்கொள்வதில் பலத்த நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.
மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களிலும் விவசாயிகளுக்கு அறுவடைக்கு எரிபொருளினைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டாலும் மாவட்டத்திற்கான எரிபொருள் வரவு தற்போது குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் உட்பட அனைவருக்கும் எரிபொருளினைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றன.
13 minute ago
21 minute ago
45 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
45 minute ago
59 minute ago