2026 மே 14, வியாழக்கிழமை

வீட்டுத் திட்டம் கோரி ஆர்ப்பாட்டம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமன்னார் பியர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு இதுவரை வீட்டுத் திட்டம் எவையும் வழங்கப்படவில்லை எனவும் வீட்டுத் திட்டம் வழங்குவதில் முறைக்கேடு இடம்பெற்றுள்ளதாகவும் கூறி குறித்த கிராம மக்கள், மன்னார் பிரதேசச் செயலகத்துக்கு முன் இன்று (04) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்கள் என்பதால் அனைத்து உதவித் திட்டங்களும் தமக்கு வழங்காது நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மன்னார் பிரதேச செயலாளர் என். பரமதாசை வினவியபோது,

“தற்போது பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தலைமன்னார் பியர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் உள்வாங்கப்பட்டு தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .