2025 மே 21, புதன்கிழமை

வீட்டுத்திட்டத்தில் முதியவர்கள் புறக்கணிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தனிநபர்கள் முதியவர்கள் என எங்களுக்கான வீட்டுத்திட்டங்களை வழங்க மறுக்கின்றனர் நாங்களும் போரினால் பாதிக்கப்;பட்டு பிள்ளைகளை இழந்தநிலையில் இன்று அநாதரவாக வாழ்கின்றோம் என, இதுவரை வீட்டுத்திட்டங்கள் மற்றும் ஏனைய உதவிகள் கிடைக்காது வாழும் தனி நபர்கள் கொண்ட மற்றும் முதியவர்களை கொண்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

யுத்தத்தன் பின்னரான மீள்குடியமர்வின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறுபட்ட உதவிகள் வழங்கப்படுகின்ற போதும், தனிநபர்;களை கொண்ட குடும்;பங்கள் முதியவர்களைக்கொண்ட குடும்பங்களுக்கான உதவிகள் கிடைப்பதில்லை என பாதிக்;கப்பட்டவர்கள் தெரிவித்;துள்ளனர்.
 

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில், மீள்குடியேறி வாழ்ந்து வரும் தனிநபர்களை கொண்ட குடும்பங்கள் முதியவர்களை கொண்ட குடும்பங்கள் தமக்கான உதவிகள் உரியமுறையில் வழங்கப்படுவதில்லை என்றும் தமக்கான உதவிகளை வழங்குவதில் தங்களை தட்டிக்கழிக்கின்றன என்றும், பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டுத்திட்டங்களுக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்படும் போது, புள்ளியிடல் முறையில் மேற்கொள்ளப்படும் தெரிவுகளில் தாங்கள் உள்வாங்கப்;படுவதில்லை என்றும் ஏனைய வாழ்வாதார உதவிகளுக்கான தெரிவுகளிலும் தாங்கள் உள்வாங்;கப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர்.

தனி அங்கத்தவர்கள் அல்லது கணவன் - மனைவி அறுபது வயதை தாண்டிவிட்டனர் என தமக்கான உதவிகளை வழங்காது என தங்களை தட்டிக்கழித்து வருகின்றனர் எனவும், அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X