2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வீதிச் சீரின்மையால் பஸ் சேவையும் இல்லை

Editorial   / 2019 ஜூலை 25 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - கரைதுறைபற்றின் இரட்டைவாய்க்கால் தொடக்கம் மாத்தளன் வரையான 13 கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்படாததன் காரணமாக, குறித்த பகுதியினூடாக பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 450 குடும்பங்கள், முல்லைத்தீவு நகரம், புதுக்குடியிருப்பு நகரம் என்பவற்றுக்குச் சென்று வருவதில் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

ஜூலை 18ஆம் திகதி நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும், குறித்த வீதியின் புனரமைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், அதற்கு பதில் வழங்கப்படவில்லை என்று, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

1990ஆம் ஆண்டுக்கு முன்னர், முல்லைத்தீவில் இருந்து இரட்டைவாய்க்கால் சந்தி வழியாக மாத்தளன் வரை பஸ் சேவைகள் இடம்பெற்றிருந்ததாக, கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .