2025 மே 21, புதன்கிழமை

‘வீதியைப் புனரமைத்தால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி - வன்னேரிக்குளத்துக்கான பிரதான வீதி புனரமைக்கப்படும் போது, வன்னேரிக்குளம் சுற்றுலா மய்யத்தை நோக்கி சுற்றுலாப் பயணிகள் இயல்பாகச் செல்லும் நிலை உருவாகுமென்று, கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துரைத்த அவர், தற்போது, பொழுதுபோக்கு மய்யத்தைப் பராமரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவததகவும் குறிப்பாக, அந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

முறிகண்டி, அக்கராயன், வன்னேரிக்குளம் வீதி புனரமைக்கப்படாத நிலை காணப்படுவதாலேயே, சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாதளவுக்குத் தடைகளும் தாமதங்களும் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், இதனால் பொழுதுபோக்கு மய்யத்தைப் பராமரிப்பதிலும் மின்சார வளங்களைப் பாதுகாப்பதிலும் அதற்கான ஆளணியை நியமிப்பதிலும் சிரமங்கள் காணப்படுவதாகவும் கூறினார்.

அதாவது, எந்தவொரு வருமானத்தையும் தராத பொழுதுபோக்கு மய்யத்துக்கு, தொழிலாளர்களை நியமித்து, தொடர்ச்சியாகப் பராமரிப்பது என்பது, தமது பாதீட்டுக்கு சவாலாக அமையுஅமனவும், அவர் தெரிவித்தார்.

எனவே, வன்னேரிக்குளம் - அக்கராயன் வீதியை புனரமைக்கும் போது, வன்னேரிக்குளம் சுற்றுலா மய்யத்தை நோக்கி சுற்றுலாப்பயணிகள் இயல்பாகவே செல்லும் நிலை உருவாகுமெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X