2025 மே 21, புதன்கிழமை

வெடுக்குநாறிமலை கோவில் வருடாந்த பொங்கல் விழா

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா, நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, தொல்லியல் திணைக்களத்தினர், வனவளத்திணைக்களத்தினர் ஆகியோர் குறித்த கோவிலுக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென்று தடை விதித்து வரும் நிலையில், தொடர் போராட்டம் காரணமாக பிரதேச மக்கள் இன்று வரை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பல வருடங்களாக மூன்று நாள்கள் மாத்திரமே திருவிழாவை நடத்தி வந்த நிலையில், இந்த வருடம் முதல் பத்து நாள்கள் திருவிழாவை மேற்கொள்ள பிரதேச மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை ஆரம்பமாவுள்ள வருடாந்த பொங்கல் விழா, செப்டெம்பர் 13ஆம் திகதியன்று நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X