Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2022 ஜூலை 20 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பட்
மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து கொழும்பு ஊடாக மன்னாருக்கு வருகின்றவர்களுக்குமான விசேட போக்குவரத்துச் சேவையை மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் ஏற்பாடு செய்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிற நிலையில் வெளிநாடுகளிலிருந்து அதிகமானோர் மன்னார் மாவட்டத்துக்கு வருகை தருகின்றனர்.
இவ்வாறு கொழும்பிலிருந்து மன்னார் மாவட்டத்துக்கு வருவதற்கு அல்லது மன்னார் மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு செல்வதற்கு சராசரியாக 70 லீட்டர் எரிபொருள் தேவைப்படுகிறது.
இது வரையில் வெளிநாடு செல்பவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இனி வரும் காலங்களில் எவ்வளவு தொகை ஒரு தனி நபருக்கு செலவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், அதி சொகுசு பஸ் முகாமையாளர்களிடம் தொடர்புகொண்டு, இவ்வாறு வெளிநாடு செல்பவர்களுக்கு அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொழும்பிலிருந்து மன்னாருக்கு வருவதற்கு அதி சொகுசு பேருந்து சேவை ஒன்றை மாவட்டச் செயலாளர் ஏற்பாடு செய்துள்ளார்.
அந்த வகையில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் கொழும்பிலிருந்து மன்னார் மாவட்டத்துக்கும், ஞாயிறு, செவ்வாய் மற்றுமு் வியாழன் ஆகிய தினங்களில் மன்னாரிலிருந்து கொழும்புக்கு செல்வதற்காக ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு செல்பவர்கள் 0774902440 என்ற கையடக்கத் தொலைபேசியின் ஊடாக தொடர்புகொண்டு, ஆசனங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
அண்மைக்காலமாக மன்னாரில் இருந்து கொழும்புக்கு 1 இலட்சம் ரூபாயும், பேசாலையில் இருந்து கொழும்புக்கு 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் வாகனக் கூலியாக அறவிடபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 May 2025
04 May 2025