2025 மே 16, வெள்ளிக்கிழமை

வேட்பாளர் மீது வெட்டு: த.தே.ம.மு இணைப்பாளர்கள் கண்டனம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கோகுலராஜ், இன்று (11) காலை வாள்வெட்டுக்கு இலக்காகி, படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள வன்னியில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இணைப்பாளர்கள், தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை கிழக்கில் ஒடுக்கும் நடவடிக்கையில் சிங்கள  படையினருடன் சேர்ந்தியங்கும் கருணா குழு செயற்பட தொடங்கியுள்ளதென்றனர்.

தேர்தலின் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றி, ஒன்று வடக்கையும் மற்றது கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்றம் செல்லவுள்ள நிலையில், அடக்குறையின் வெளிப்பாடாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாகவும், அவர்கள் சாடியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .