2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியரை நியமிக்கக் கோரி மக்கள் போராட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்  

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் ஆரம்பச் சுகாதார வைத்திய நிலையத்துக்கு நிலையான வைத்தியர் ஒருவரை நியமிக்கக் கோரி, அப்பகுதி மக்களால், இன்று (03) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துரைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த  ஆரம்பச் சுகாதார வைத்திய நிலையத்தில், நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்களெனவும் இந்நிலையில், ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து, வைத்தியர்கள் எவரும் இல்லாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வைத்தியரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .