2025 மே 15, வியாழக்கிழமை

வைத்தியர்கள் பற்றாக்குறை: வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி,  மாவட்ட அரச வைத்திய அதிகாரிகளால், இன்று (11) அடையாள பணிப்புறக்கணிப்பொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மிக நீண்ட நாள்களாக நிலவி வரும் வைத்தியர் பற்றாக்குறையை நீக்குமாறு கோரி, உரிய அதிகாரிகளிடம் பலதடவைகள் கோரிய போதும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையிலேயே,  காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை, இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் பணி புறக்கணிப்பு காரணமாக, வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .