2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பக்கவிளைவில்லா மாத்திரை

A.P.Mathan   / 2010 ஜூலை 28 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பலவகையான மாத்திரைகளை அன்றாடம் நாங்கள் பார்க்கின்றோம். ஒவ்வொரு வருத்தத்திற்கும் பல மாத்திரைகள் இருக்கின்றன. இவற்றினை பாவிப்பதால் பல பக்க விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது.

குறிப்பாக அழகாக இருப்பதற்காக பல மாத்திரைகள் இப்பொழுது சந்தையிலே விற்கப்படுகின்றன. இவற்றினைப் பாவிப்பதால் தலைசுற்றல், வாந்தி போன்ற பக்க விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றன. அதிலும் உடற்பருமனைக் குறைப்பதற்கு பலரும் பலவிதமான மாத்திரைகளை பாவிக்கின்றனர். உடற்பருமன் குறைவதைவிட பக்கவிளைவுகள்தான் அதிகமாகுவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த பிரச்சினைகளை மனதிற்கொண்டு, அமெரிக்க மருத்துவர்கள் பல ஆராய்ச்சிகளை செய்தனர். இறுதியில் பக்கவிளைவற்ற 'தொப்பை குறைப்பு' மாத்திரையினை கண்டுபிடித்திருக்கின்றனர். ஆரம்பகட்டமாக சுமார் 3,200 பேரிடம் இம்மாத்திரையினை பரிசோதித்திருக்கிறார்கள். இந்த பரிசோதனை பக்கவிளைவற்ற மாத்திரை என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

சந்தையில் தற்போதுள்ள மாத்திரைகளைவிட இந்த மாத்திரைகளின் வீரியம் குறைவாக இருப்பினும் பக்கவிளைவு இல்லை என்பது இதன் சிறப்பாகும். இந்த பக்கவிளைவற்ற மாத்திரையினை ஒரு நாளைக்கு இரண்டு என்ற வீதத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் தொப்பை கரைந்துவிடுமென அமெரிக்க மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.


 

 


  Comments - 0

  • tharmini pathmanathan Monday, 02 August 2010 02:49 PM

    entha maaththiraikku name ellaija ? name i sollavum

    Reply : 0       0

    jathu Monday, 24 January 2011 07:16 PM

    அது என்ன மாத்திரை ?

    Reply : 0       0

    mohamed ishraf Tuesday, 13 March 2012 05:06 PM

    அது என்ன மாத்திரை ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X