2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பிஸியாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்

Super User   / 2010 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோம்பலாக இருப்பதைவிட தொடர்ந்து ஏதேனும் வேலைகளை செய்துக்கொண்டு பிஸியாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்று ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  கிறிஸ்டோபர் கே.ஹஸீ, அதெல்லா யாங் மற்றும்  சீனாவின் ஷாங்காய் ஜியாவோடொங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லிங்கியான் வெங் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட ஆய்விலே அதிகமாக வேலை செய்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.


வெறுமனே இருப்பதைவிட ஏதேனும் வேலைகளை செய்துகொண்டிருந்தால் - அவை பிரயோசனமானவையாக இல்லாவிட்டாலும்கூட – மகிழ்ச்சியாக இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
 

மகிழ்ச்சியாக இருப்பதற்கான வெளிப்படையான வழியாக கூறப்படுவது, பணம் சம்பாதிப்பதற்கோ  அல்லது பிறருக்கு உதவுவதற்காகவோ தொழிலொன்றை அமைத்துக் கொள்ளுங்கள் என்பதாகும்.


ஆனால், "இவ்விடயம் இதைவிட ஆழமானது என எண்ணுகிறேன். எம்மிடம் அதிகளவான சக்தி உள்ளது. நாங்கள் சோம்பலை தூக்கியெறிய வேண்டும்" என்று கிறிஸ்டோபர் ஹஸீ தெரிவித்துள்ளார்.


இந்த ஆய்வில் பங்குபற்றிய தொண்டர்கள் ஒரு கட்ட ஆய்வை முடித்தபின் அடுத்தக்கட்ட ஆய்வு ஆரம்பிப்பதற்கு 15 நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது. அவர்களது ஒரு கட்ட ஆய்வு பூர்;த்தியான பின்னர் அவர்கள் டொபியை பெற்றுக்கொண்டனர்.


ஒவ்வொரு ஆய்வுப்படிவத்தையும் அவர்கள் 15 நிமிட தூரத்திலுள்ள நிலையமொன்றில் கொண்டு சென்று கொடுக்கவேண்டியிருந்தது.
இதன்போது நீண்ட தூரம்  நடந்து சென்றவர்கள் சும்மா இருப்பவர்களைவிட மகிழ்ச்சியாக இருப்பது கண்டறியப்பட்டது.


ஒரு மாதிரியான இனிப்புகள் வித்தியாசமான இரு நிலையங்களில் வழங்கப்பட்டபோது, தொண்டர்களில் பலர் தூரத்திலுள்ள நிலையத்திற்குச் செல்வதை தெரிவு செய்தனர். காரணம், அதில் அவர்கள் மகிழ்ச்சியாக உணர்ந்தனர் என ஹஸீ யும் அவரின் சகாக்களும் கூறியுள்ளனர்.


இந்த ஆய்வு விபரம் 'சைகோலஜிகல் சயன்ஸ்' சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X