2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

உணவு சமைப்பதற்கு தயங்குவது ஏன்?

Kogilavani   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று அநேகமான பெண்களிடம் உங்களுக்கு சமைப்பதற்குத் தெரியுமா என்று கேட்டால் 'நான் இதுவரை சமயலறைப் பக்கமே சென்றதில்லை' என்றுதான் கூறுவார்கள். சமைப்பதற்குத் தெரியவில்லை என்று கூறுவதை இன்றைய நாகரிகமாக அவர்கள் கருதுகிறார்கள்.

சுளகு கொண்டு அரிசியை புடைப்பதற்கு தெரியாத பெண்களையும் விசேட தினங்களில் இனிப்புப் பண்டங்களை கடைகளில் வாங்கும் பெண்களையுமே இன்று அநேகமாகக்  காணக்கூடியதாக உள்ளது.

altஎமது மூதாதையர் கட்டிக்காத்த இந்த சமையற்கலை கொஞ்சம்கொஞ்சமாக அழிந்து போய்விடும் நிலையில்தான் உள்ளது.

பெண்களும் சரி, ஆண்களும் சரி, சமையலை ஓர் அநாவசிய விடயமாக கருதுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

சமையல் என்பதும்  ஒருவகை கலைதான். அந்தக் கலையை விருப்பத்துடன் மேற்கொள்வோமானால் எம்மைப்போல் சமைப்பதற்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள். எமது கைப்பக்குவமே தனியாக இருக்கும்.

எமது பசியை போக்கிக்கொள்ள எத்தனை காலத்திற்கு அடுத்தவர் கைகளையே பார்த்துக்கொண்டு இருக்கமுடியும்? 'அம்மா சமைத்து தருவார் எனக்கென்ன கவலை?' என்று அம்மாவை எதற்கும் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதை தவிர்த்து, நாமும் சமைப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று ஊரைவிட்டு ஊரைத் தாண்டிச்சென்று தொழில் புரியும் ஆண்களும் பெண்களும் உணவுப்பொதிகளை கடைகளிலே வாங்கி உண்கின்றார்கள். இவர்களில் விடுதிகளில் தங்கியிருந்து தொழில் புரிபவர்களை தவிர மாத வாடகைக்கு வீடெடுத்து வாழ்பவர்கள் தங்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடைகளையே நம்பி வாழ்கின்றார்கள்.

இவர்களுக்கு வாங்கும் ஊதியம் மாத உணவுக்கே  போதுமாகவுள்ளது. இவர்களிடம் காரணம் கேட்டால் 'சமைப்பதற்கு தெரியாது. அதற்கெல்லம் ரிஸ்க் எடுக்க முடியாது...' என்று பன்ச் டயலொக் பேசிவிட்டுச் சென்றுவிடுவார்கள். இவ்வாறான உணவுப் பழக்கவழக்கங்களால் உடலுக்குதான் தீங்கு ஏற்படுகிறது என்பதை இவர்கள் புரிந்துக்கொள்வதாக இல்லை.

சமைப்பதற்கு தெரிந்திருந்தால் நாம் வேண்டிய நேரத்தில் விரும்பியதை செய்து உண்ணலாம். இது எமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும், அதேவேளை பணத்தையும் மீதப்படுத்தும்.

altஇந்த சமையலை கற்றுக்கொள்வதால் என்ன தீங்குதான் ஏற்படப்போகிறது?
சமைக்கத் தெரியாது என்றுக் கூறுபவர்கள் முழுமையாக சமைப்பதற்கு தெரியாதவர்கள் அல்ல, சமையலை கற்றுக்கொள்ள உடன்பாடில்லாதவர்களே .

இதற்குக் காரணம் நாகரிக மோகம்.  கிராமப்புறங்களில் வசிப்பவர்களின் சமையல் கைப்பக்குவமே தனியாக இருக்கும்.

நகர்புறங்களில் வாழும் அநேகமானவர்கள் தமக்கு சமைப்பதற்குத் தெரியும் என்று கூறினால் கிராமப்புறத்திலிருந்து வந்தவர்கள் என்று தம்மை எண்ணிவிடுவார்கள் என்பதாலும் தமக்கு சமைப்பதற்கே தெரியாது என்று கூறுகின்றார்கள். இதைவிட வேறு காரணங்களும் உண்டு.

ஆனால், மேலைத்தேய நாடுகளில் கூட பெண்களும் ஆண்களும்  சமையலை விரும்பி மேற்கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் இருந்தாலும் நம்ம கையால் சமைத்து சாப்பிடுவதுபோல் வேறொங்கும் கிடைத்திடுமா?


  Comments - 0

  • xlntgson Tuesday, 24 August 2010 08:43 PM

    நல்ல கருத்து.செய்தி ஆசிரியர் யாரோ,ஆசிரியத் தலையங்கமா இது? சமையல் தெரிந்த பெண்ணா என்று யாரும் கேட்பதில்லை. வரன்களுக்கு பெண் தேடும் பழக்கமும் இல்லை. 'முகப்புத்தகங்களில்' முகங்களை புதைத்துக்கொண்டு கடைசியில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.வேலைக்கு போகும் கை நிறைய சம்பாதிக்கும் பெண்களுக்கே நல்ல மதிப்பு இருக்கிறது.அழகான பெண்கள் பெருமையில் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே போகின்றனர்.அவர்களது திருமணங்கள் சொற்ப காலத்தை மட்டும் கொண்டதாக ஆக்க அவர்களது அழகை வர்ணித்து தூண்டுகிறவர்களும் அவர்களை தலை கனம் பிடிக்க வைக்க?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X